உலக அளவில் கரோனா பாதிப்பு 5.65 கோடியாக உயர்வு

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 லட்சத்து 58 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கரோனா பாதிப்பு 5.65 கோடியாக உயர்வு
உலக அளவில் கரோனா பாதிப்பு 5.65 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 லட்சத்து 58 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 217  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 65 லட்சத்து 58 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,93,49,808 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 13,54,616 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,58,53,798 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,01,442 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.  அங்கு இதுவரை 1,18,73,727 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,56,254 பேர் பலியாகியுள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில்  இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 89,12,907 பேரும், பிரேசிலில் 59,45,849  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில்  1,67,455 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,30,993 உயிரிழப்புகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் 59,45,849 பாதிப்பு மற்றும் 46,698 உயிரிழப்புகளுடன் பிரேசில் நான்காவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com