சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அமெரிக்கா: விமானங்களைத் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

அமெரிக்காவில் எதிர்வரும் நன்றிகூறும் கால விடுமுறையைக் கருத்தில்கொண்டு தங்களுடைய விமானங்களைத் தூய்மைப்படுத்துவதில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

News image

அமெரிக்கா: விமானங்களைத் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

Updated On :19 நவம்பர் 2020, 9:35 am

அமெரிக்காவில் எதிர்வரும் நன்றிகூறும் கால விடுமுறையைக் கருத்தில்கொண்டு தங்களுடைய விமானங்களைத் தூய்மைப்படுத்துவதில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நன்றிகூறும் கால விடுமுறைக்காக மக்கள் வெளியூர்கள் செல்ல வேண்டாம் என்றும் குடும்பங்கள் ஒன்றுசேர வேண்டாம் என்றும் அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றே  அமெரிக்கன் ஏர்லைன்ஸ் எதிர்பார்க்கிறது.

அடுத்த 12 நாள்களுக்குள் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,  விமானங்களைத் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா பரவலால் குறைந்த அளவிலான பயணிகள் விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன.

விமானங்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி கிருமிநாசினி கொண்டு நாள்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. பயணிகள் இருக்கை, சீட் பெல்ட், கைப்பிடி போன்றவை விமான நிலைய ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

மறுபயணத்திற்காக புறப்படுவதற்கு முன்பு விமானத்தை தூய்மைப்படுத்த 5 நிமிடங்கள் மட்டுமே செலவிட்ட நிலையில், தற்போது கரோனா தொற்றால் 20 நிமிடங்கள் வரை செலவிடுவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமானம் முழுவதும் மின்னணுத் தெளிப்பான் மூலம் நான்கு நாள்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு விடுமுறை நாள்களில் 6,200 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 4 ஆயிரம் விமானங்கள் மட்டுமே அமெரிக்கன் ஏர்லைன்ஸில் இயக்கப்படுகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.