தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ரஷியாவில் உச்சத்தைத் தொட்ட ஒருநாள் கரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 524 பேர் பலியானதை அடுத்து, ஒருநாள் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத்தொட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :26 நவம்பர் 2020, 9:55 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 524 பேர் பலியானதை அடுத்து, ஒருநாள் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத்தொட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 25,487 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,87,990 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 524 பேர் உள்பட இதுவரை 38,062 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், கடந்த நேற்றும், இன்றும் ஒருநாள் பலி 500யைத் தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் பதிவான ஒருநாள் பலி எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். அதேபோன்று ஒருநாள் பாதிப்பும் இன்றைய தினம் அதிகபட்சமாகும். 

தற்போதுவரை 16,85,492 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,64,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.