ஐபிஎல் வரலாற்றில் ஆவேஷ் கான் மூன்றாவது முறையாக 1 ரன் த்ரில் வெற்றியில் பங்கேற்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து வென்றது.
கடைசி பந்தில் முகுல் சௌதரி பந்தை அடிக்காமல் விட்டுவிட கொல்கத்தா அணியின் கீப்பர் அதைச் சரியாக பிடித்து ஸ்டம்பில் அடிக்கும் முன்பாக, ஆவேஷ் கான் 1 ரன்னை எடுத்து முடிப்பார். இதேபோல அவர் 1 ரன் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஆவேஷ் கான் 3 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். மற்ற போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் வெற்றியில் பங்களித்திருந்தார்.
முன்னதாக ஆர்சிபிக்கு எதிராக, 2023ல் கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் பந்துவீச, அந்தப் பந்தை அடிக்காமல் விட்ட ஆவேஷ் கான் 1 ரன் ஓடி வெற்றிக்கு வித்திடுவார். அந்தப் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, ஹெல்மட்டை தூக்கி வீசுவார்.
பின்னர், 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
இந்தப் போட்டியில் 9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கிய ஆவேஷ் கான் ஒரு பந்துகூட விளையாடாமல் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.
Summary
Avesh Khan and his 1 run win in ipl history will continue third time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சல்மான் கான் - நயன்தாரா படத்தில் 4 இசையமைப்பாளர்கள்?
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

