அணு விஞ்ஞானி கொலையின் பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி
ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி

அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவர் ஃபக்ரிசாதே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது அந்நாட்டில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை சீர்குலைக்காது என்றும், இந்த விலைமதிப்பற்ற தியாகியின் பாதையைத் தொடர இளம் விஞ்ஞானிகளை இன்னும் உறுதியடையவர் என்றும் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குஇரான் பதிலடி தரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com