/

இத்தாலியின் சர்தீனியா தீவில் வெள்ளம்: 3 பேர் பலி, ஒருவர் மாயம்

இத்தாலியின் சர்தீனியா தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள்.

News image

கோப்புப் படம்.

Updated On :29 நவம்பர் 2020, 11:57 am

DIN

இத்தாலியின் சர்தீனியா தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள்.
இத்தாலியின் நூரோ மாகாணத்தில் உள்ளது சர்தீனியா தீவு. இங்கு நேற்று கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூரோவின் பிட்டி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தன. 
மின் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பள்ளிகள் மற்றும் பூங்காக்களும் மூடப்பட்டன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 பேர் பலியானார்கள். ஒருவர் மாயமானார். 
தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.