'எனக்கு கரோனா இல்லை': மைக் பாம்பியோ
எனக்கும், எனது மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
வாஷிங்டன்: எனக்கும், எனது மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக கரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், கரோனா தொற்று 'நெகடிவ்' என முடிவு வந்துள்ளதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவது மனைவி மெனிலா டிரம்புக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை சுட்டுரை வாயிலாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே தமக்கு கரோனா இல்லை என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், துபை, பஹ்ரைன் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்குவதற்காக கடைசியாக நவம்பர் 15-ஆம் தேதி அதிபர் டிரம்ப்பை சந்தித்தேன். அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று மைக் பாம்பியோ கூறினார்.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா மற்றும் ஆசியாவிற்கு மேற்கொள்ள உள்ள பயணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...