ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரஷியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 188 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2020, 8:43 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 188 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 11,615 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து, மொத்த பாதிப்பு 12,37,504 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உள்பட இதுவரை 21,633 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேநேரத்தில் தற்போது வரை 9,88,576 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 2,27,265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரஷியாவில் கடந்த மாதம் ஒருநாள் கரோனா பாதிப்பு சராசரியாக 4,000 என்ற அளவில் குறைந்த நிலையில், நேற்று முன்தினம் ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.