ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

இலங்கையில் மீண்டும் கரோனா பரவல்: 81 பேருக்கு பாதிப்பு

இலங்கையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :6 அக்டோபர் 2020, 9:21 am

இலங்கையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையும் விட்டுவைக்கவில்லை. எனினும், அந்நாட்டுஅரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் வைரஸ் பரவல் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இதையத்தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. 

இந்த நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மினுவங்கொடவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,600 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைரஸ் பரவலைத்தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய  மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.