கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்திய வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை நிறுத்தியிருக்கும் சீனா: மைக் பாம்பியோ

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனா சுமார் 60 ஆயிரம் படையினரை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

News image
இந்திய வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை நிறுத்தியிருக்கும் சீனா: மைக் பாம்பியோ
Updated On :10 அக்டோபர் 2020, 9:31 am

PTI


வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனா சுமார் 60 ஆயிரம் படையினரை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் இந்த நடவடிக்கை, மிக மோசமான நடத்தை என்றும் அவர் விமரிசித்துள்ளார்.

இந்தோ -பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பான குவாத் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை டோக்யோவில் கூடினர். கரோனா தொற்றுக்குப் பிறகு, உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் கூட்டமாக இது கருதப்பட்டது.

இந்தோ-பசிபிக், தெற்கு சீனக் கடல் மற்றும் லடாக் சர்வதேச எல்லைப் பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய பாம்பியோ செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியர்கள் தங்களது வடக்கு எல்லையில் சுமார் 60 ஆயிரம் சீனப் படைகள் நிற்பதை பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நான் இந்திய, ஆஸ்திரேலிய, ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக, பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நான்கு நாடுகளும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன என்றும் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் டோக்யோவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா - ஜப்பான் - அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சா்களின் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கா் கலந்து கொண்டார். 

உலகம் முழுவதும் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு எதிராக இணைந்து போராட வேண்டிய தேவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, வளா்ச்சி தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்தோ - பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் சீன ராணுவ - கடற்படை நடவடிக்கையின் பின்னணி குறித்தும் தலைவர்கள் பேசியுள்ளனர். இந்த கூட்டத்தின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனும் ஜெய்சங்கா் இருதரப்பு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.