/

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.74 கோடி: பலி 10.77 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.74 கோடியாக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2020, 3:52 am

உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.74 கோடியாக உயர்ந்துள்ளது. 

உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,30,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சா்வதேச அளவில் இதுவரை 3,74,67,892 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2, கோடிய 81 லட்சத்து 12 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர். 

சா்வதேச அளவில் 82,77,845 போ் சிகிச்சையில் உள்ளனா். அவர்களில் 68, 632 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.