ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ரஷியாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கரோனா தொற்று; மேலும் 232 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,150 ​பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 232 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :16 அக்டோபர் 2020, 10:12 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 232 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 15,510 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 13,69,313 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 232 பேர் உள்பட இதுவரை 23,723 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 10,56,582 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 2,89,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.