தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

உலகம் முழுவதும் தற்போது 1 கோடி கரோனா நோயாளிகள்

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.37 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3.21 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 11 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

News image

உலகம் முழுவதும் தற்போது 1 கோடி கரோனா நோயாளிகள்

Updated On :27 அக்டோபர் 2020, 3:49 am

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.37 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3.21 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 11 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,37,76,587 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,21,79,748 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,64,515 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,04,32,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 79,051 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 89,62,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,31,045 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் ஐந்தாவது இடத்தில் பிரான்ஸும் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.