ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தெற்கு சீனாவில் வெள்ளத்தால் 4 பேர் பலி

தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

தெற்கு சீனாவில் வெள்ளத்தால் 4 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :11 செப்டம்பர் 2020, 10:13 am

தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் சஞ்சியாங் டோங் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

டாங்ஷுய் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை ஒரு மரவீடு வெள்ளத்தால் இடிந்து நாசமாகியது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

அந்த பகுதி முழுவதும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.