கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி 100 குழந்தைகள் உள்பட 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:19 pm

DIN

பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி 100 குழந்தைகள் உள்பட 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத பிற்பாதி முதல் பருவமழைத் தொடங்கி தொடர் கனமழை பெய்து வருகிறது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கிறது.

எனினும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில் ஏற்பட்ட இன்னல்களால் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது, பருவமழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் சிக்கி இதுவரை 135 ஆண்கள், 107 குழந்தைகள், 70 பெண்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர். 

கரோனா தொற்றால் ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 6,377 பேர் உயிரிழந்த நிலையில், பருவமழையாலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

இதில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 136 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 116 பேரும், பஞ்சாபில் 16 பேரும், பலூசிஸ்தானில் 21 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேரும், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் 11 பேரும் உயிரிழந்தனர்.

பருவமழை பாதிப்பில் சிக்கி 142 பெண்கள், 41 குழந்தைகள், 6 ஆண்கள் உள்பட 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.