ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் மிக முக்கியமானதாகும். நோய்த் தொற்றால் அதிகம் பாதித்தோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவும், நோய்த் தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது.
அங்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 950 பேர் பலியாகினர். அதன் பிறகான நாள்களில் பலி எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து 4 நாள்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) மீண்டும் உயரத் தொடங்கியது. செவ்வாய்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 743 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இன்றைய (புதன்கிழமை) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 757 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 14,500 -ஐத் தாண்டி 14,555 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட பாதித்தோரின் எண்ணிக்கை 1,46,690 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


