தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரிட்டனில் ஆச்சரியம்: கரோனாவில் இருந்து மீண்ட 98 வயது இந்திய வம்சாவளி பெண்

மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 98 வயது இந்திய வம்சாவளிப் பெண் சிகிச்சையின் காரணமாக குணமடைந்த

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 1:31 pm

லண்டன்: மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 98 வயது இந்திய வம்சாவளிப் பெண் சிகிச்சையின் காரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தப்னே ஷா என்ற பெண் வரும் ஜூலை மாதம் தனது 99வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பயனாக, மிக விரைவாக குணம் அடைந்து, மருத்துவமனையில் இருந்து சில நாட்களிலேயே வீடு திரும்பியுள்ளார்.

எனது மகன் என்னை பல நாட்களுக்குப் பிறகு பார்க்கிறார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ரொம்ப நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஜூலை மாதம் பிறந்ததினத்தை சிறப்பாகக் கொண்டாடும் திட்டம் இருக்கிறது என்று கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஷா ஊடகம் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.