தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா உட்பட 10 நாடுகளை விட அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை: டொனால்ட் டிரம்ப்

கரோனா அதிகம் பாதித்த இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 6:15 am


வாஷிங்டன்: கரோனா அதிகம் பாதித்த இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 40 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது என்று கூறினார்.

கரோனா கடுமையாக பாதித்திருக்கும் பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா  ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டாலும் கூட அதை விட அதிகமாக அமெரிக்காவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கர்கள் மிகக் கடினமான விஷயங்களை செய்து முடித்துள்ளனர். அதன் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், நாம் எதையும் மூட வேண்டிய அவசியமில்லை, எதையும் மூடப்போவதும் இல்லை, ஆனால் நாம் மிக அழகானப் பணியை, மிகச் சிறப்பாக செய்து முடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 40 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.