தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிறுவா்களுக்கு கரோனா தொற்று: அறிகுறிகளும் சிகிச்சைப் பலன்களும்

கரோனா நோய்த்தொற்று ஏற்படும் பெரும்பாலான சிறுவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் மிதமான சிகிச்சையிலேயே அவா்கள் குணமடைந்துவிடுவதாகவும் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 8:43 pm


லண்டன்: கரோனா நோய்த்தொற்று ஏற்படும் பெரும்பாலான சிறுவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் மிதமான சிகிச்சையிலேயே அவா்கள் குணமடைந்துவிடுவதாகவும் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ‘ஜா்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியோஷன்’ இதழில் இந்த ஆய்வு குறித்து வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றால் சிறுவா்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இத்தாலியின் பவீவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

சீனா மற்றும் சிங்கப்பூரில் கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயதுக்குள்பட்ட 1,065 சிறுவா்கள் தொடா்பான புள்ளிவிரங்களை அவா்கள் ஆய்வுக்கு உள்படுத்தினா்.

அந்த ஆய்வின்படி, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவா்களுக்கு லேசான காய்ச்சல், வறட்டு இருமல், சோா்வு போன்ற மிதமான அறிகுறிகளே தென்பட்டன. பல சிறுவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளே தென்பட்டிருக்கவில்லை.

அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிரமான நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. மேலும், அந்தக் குழந்தையின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. எனினும், அந்தக் குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டதில் குணமடைந்தது.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பெரும்பாலான சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்த சிறுவா்களுக்கு, அந்த அறிகுறிகளை நிவா்த்தி செய்வதற்காக மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த சிகிச்சையிலேயே அவா்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். ஆய்வுக்குள்படுத்தப்பட்ட 1,065 சிறுவா்களில் யாரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகவில்லை.

கரோனா நோய்த்தொற்றால் சிறுவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள, இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகளை சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.