பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதன் மூலம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வூஹான் ஒரே ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத இடமாக மாறியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவில் கரோனா தொற்றால் சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.4,633 பேர் மரணம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை 82,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 723 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 77 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்.
திங்கள்கிழமை நிலவரப்படி, சீனாவில் புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வூஹானில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்களாக அங்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், கரோனா பாதித்து குணமடைந்த அனைவரும் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


