ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி தற்போது 9ஆம் இடத்தில் உள்ளது. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகபட்சமாக ஒருநாளில் 6,174 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் நேற்று ஒருநாள் பாதிப்பு வெறும் 252 ஆகும்.
தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,84,861 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,729 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.69 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

முன்விரோதத்தில் மோதல்: காயமடைந்த பெண் உயிரிழப்பு - உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

