ஜெர்மனியில் புதிதாக 630 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 1,92,079ஐ எட்டியது

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேருக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

மாஸ்கோ: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேருக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,079ஐ எட்டியுள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு இதுவரை ஒரே நாளில் 13 உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 8,927 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 587 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 19 பேர் தொற்றுக்கு பலியாகினர். இதுவரை 176,300 கரோனா பாதித்து குணமடைந்துள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனாவால் 95,32,128 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,85,122 பேர் மரணம் அடைந்துள்ளனர். 51,79,011 பேர் குணமடைந்துள்ளனர் என்று ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com