தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது!

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது. 

News image
Updated On :3 மே 2020, 10:59 am

உலகளவில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், பல நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதனால் உலகளவில் கரோனா பாதிப்பு 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 35 லட்சத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 48 ஆக உள்ளது. இதில், 11 லட்சத்து 28 ஆயிரத்து 466 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 67 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.