அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் கமலா ஹாரிஸ்.
இதைத் தொடர்ந்து, ஜோ பிடனுடன் தொலைபேசியில் பேசும் விடியோவை கமலா ஹாரிஸ் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாம் சாதித்துவிட்டோம் ஜோ (ஜோ பிடன்). நீங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் போகிறீர்கள்." என்று மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.