வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அமெரிக்காவில் மேலும் 51,399 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 646 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும், 646 பேர் உயிரிழந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2020, 5:50 am

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும், 646 பேர் உயிரிழந்தனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 65,53,303 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,94,489 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51,399 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 646 பேர் உயிரிழந்தனர். 

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,57,778 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 663,445, புளோரிடாவில்  6,61,160 பேரும், நியூயார்க்கில் 4,44,948 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 60 லட்சத்தையும், செப்டம்பர் 14 ஆம் தேதி 65 லட்சத்தையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.