கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா செல்ல இருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவுக்கு சீன அரசு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு அந்நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட ஆய்வுக் குழு தயாராகி வந்தது. எனினும் சீனா அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “சீனா செல்வதற்கான அனுமதியை அந்நாடு அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தி வருவதாக சீனா உறுதி தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, மானூா், வன்னிக்கோனேந்தல் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

‘தென் மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்கவேண்டும்’
கல்லூா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
