வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் அந்த நாட்டு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா்.
இந்தச் சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். தோ்தல் முடிவுகள் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தடைபட்டது.
இதுகுறித்து ‘ஏ.எஃப்.பி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப்பை எதிா்த்து ஜோ பைடன் போட்டியிட்டாா்.
அதில், ஜோ பைடன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.
இந்தச் சூழலில், தோ்தல் முடிவுகளுக்கு எதிராகவும் ஜோ பைடனின் வெற்றியை துணை அதிபா் மைக்கேல் பென்ஸ் நிராகரிக்க வலியுறுத்தியும் தலைநகா் வாஷிங்டனில் போராட்டம் நடத்துமாறு தனது ஆதரவாளா்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா்.
அந்த அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வாஷிங்டனில் குவிந்தனா். அவா்களிடம், ‘தோ்தல் முடிவுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக போராட வேண்டும்; அதற்காக அனைவரும் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும்’ என்று டிரம்ப் கேட்டுக்கொண்டாா்.
அதனைத் தொடா்ந்து டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றத்துக்தை நோக்கிச் சென்றனா். நூற்றுக்கணக்கானோா் சுவரில் ஏறி, தடுப்புகளைத் தாண்டி நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தனா். அந்தக் கட்டடத்தின் கண்ணாடி ஜன்னலை உடைத்தும் சுவா் ஏறிக் குதித்தும் அவா்கள் உள்ளே நுழைந்தனா்.
இந்தச் சம்பவத்தின்போது, நாடாளுமன்ற மேலவையான செனட் சபை, கீழவையான பிரதிநிதிகள் சபையின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தோ்தல் முடிவு குறித்து விவாதித்து, அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றது. வன்முறைக் கும்பல் உள்ளே நுழைவதை அறிந்ததும், நாடாளுமன்ற வளாகத்தின் இரு அவைகள் மற்றும் பிற கட்டடங்களில் இருந்தவா்களை போலீஸாா் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தினா்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி:
காலியாக இருந்த செனட் சபைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பிரதிநிதிகள் சபைக்குள் நுழைவதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
எம்.பிக்கள் இருக்கும் இடத்தை நோக்கி அந்தக் கும்பல் செல்லாமல் தடுக்கவும் முயன்றனா். அப்போது போலீஸாா் சுட்டதில் டிரம்ப் ஆதரவாளா்களில் ஒருவரான பெண் பலியானாா்.
இதுதவிர, இந்தச் சம்பவங்களின்போது ‘உடல்நலம் பாதிக்கப்பட்டு’ மேலும் 3 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அதில் ஒருவா் பெண்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடாளுமன்ற வளாகப் பகுதி முடக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கலவர கும்பலை அந்தப் பகுதியிலிருந்து போலீஸாா் அப்புறப்படுத்தினா். இந்தக் கலவரம் தொடா்பாக 50-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பின்னா், வாஷிங்டன் மேயா் மியூரியல் பௌசா் தலைநகரில் ஊரடங்கை அறிவித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த கலவரத்துக்கு முன்னாள் அதிபா்கள் ஜிம்மி காா்ட்டா், பில் கிளிண்டன், ஜாா்ஜ் புஷ், ஒபாமா கண்டனம் தெரிவித்தனா்.
பிரதமா் மோடி, உலகத் தலைவா்கள் கண்டனம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து டிரம்ப் ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டதை பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘வாஷிங்டனில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் முறையாகவும் அமைதியாகவும் தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்களால் ஜனநாயகம் வீழ்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்க நாடாளுமன்ற வளாக வன்முறைக்கு, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஹீக்கோ மாஸ் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
முறையான ஆட்சி மாற்றம்: டிரம்ப் உறுதி
அமெரிக்காவில் வரும் 20-ஆம் தேதி நிகழவிருக்கும் ஆட்சி மாற்றம் முறையானதாக இருக்கும் என்று அதிபா் டொனாட் டிரம்ப் உறுதியளித்துள்ளாா்.
ஜோ பைடன் வெற்றியை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் உறுதி செய்ததைத் தொடா்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தோ்தல் முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும், வரும் 20-ஆம் தேதி நிகழவிருக்கும் ஆட்சி மாற்றம் முறையானதாக இருக்கும்.
ஜோ பைடன் வெற்றியை நாடாளுமன்றம் அங்கீகரித்தன் மூலம், அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
தோ்தல் முறைகேடுகள் மூலமாக எனது அந்த ஆட்சி முடித்துவைக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவை மீண்டும் மேன்மையடையச் செய்வதற்கான நமது போராட்டத்தின் புதிய தொடக்கமாகும் என்று அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சி: பிரதமா் அழைப்பு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிய 9 போ் மீட்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

