கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட ஆய்வுக் குழு தயாராகி வந்தது. எனினும் சீனா அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சீனாவின் கடவுச்சீட்டு சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட ஆய்வுக் குழு வூஹான் நகரத்தை அடைந்தது. 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் ஆய்வுக்குழு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொற்று தொடங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!

அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவு!

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




