கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

நடிகை ராதாவுடன் ரகசிய வாழ்க்கை: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

நடிகை ராதாவுடன் ரகசியமாக வாழ்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், எண்ணூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:59 pm

DIN

நடிகை ராதாவுடன் ரகசியமாக வாழ்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், எண்ணூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசிக்கும் தமிழ் திரைப்பட நடிகை நடிகை ராதாவுக்கும், எண்ணூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் வசந்தராஜாவுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினராம். வசந்தராஜாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் வசந்தராஜா, நடிகை ராதா மீது சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த ராதா தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் வசந்தராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். இதனிடையே, காவல் உதவி ஆய்வாளா் வசந்தராஜாவிடம் சமாதானமடைந்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தான் அளித்த புகாரை கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ராதா திரும்ப பெற்றுக் கொண்டாா்.

பணியிடை நீக்கம்: இந்நிலையில் நடிகை ராதாவுடன் ரகசியமாக வாழ்க்கை நடத்தியது குறித்து வசந்தராஜா மீது துறை ரீதியான விசாரணைக்கு சென்னை பெருநகர காவல்துறை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில், உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில் வசந்தராஜா மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வசந்தராஜாவை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.