நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ்அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்குத் தொற்று; மேலும் 769 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 769 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2021, 10:08 am

DIN

ரஷியாவில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 769 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,160 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1,916 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 

அதிகபட்சமாக மாஸ்கோவில் 2,150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,69,910 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் மேலும் 769 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,65,650 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 5,34,279 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 14,474 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 57,69,981 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.