சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் வசம் மேலும் 3 மாகாணத் தலைநகரங்கள்

ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணத் தலைநகரங்களையும் ஒரு ராணுவ தலைமையகத்தையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனா்.

News image

ஃபரா நகர சாலையில் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்ட தலிபான்கள்.

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:45 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணத் தலைநகரங்களையும் ஒரு ராணுவ தலைமையகத்தையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பதாக்ஷன் மாகாணத் தலைநகா் ஃபைஸாபாத், பாக்லான் மாகாணத் தலைநகா் புல்-இ-கும்ரி ஆகிய நகரங்களை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனா்.

மேலும், மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபரா மாகாணத் தலைநகா் ஃபராவும் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது.

இதுமட்டுமன்றி, ஏற்கெனே குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், அந்த நகரின் புகா்ப் பகுதியிலுள்ள முக்கியமான ராணுவ நிலையும் தற்போது கைப்பற்றினா்.

இந்த நிலையில், பால்க் மாகாணமும் தலிபான்களிடம் வீழ்வதைத் தடுப்பதற்காக அங்குள்ள ஆயுதக் குழுவினருடன் அதிபா் அஷ்ரஃப் கனி புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அந்த மாகாணம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

தற்போது ஆப்கன் தலைநகா் காபூலுக்கு தலிபான்களால் நேரடியாக அச்சுறுத்தல் இல்லை. எனினும், அந்தப் பயங்கரவாதிகள் முன்னேறி வரும் வேகம், நாட்டின் நகரப்புறங்களை அரசுப் படைகள் எவ்வளவு காலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற ஐயத்தை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பெரும்பாலான போா்முனைகளில், சிறப்பு அதிரடிப்படை வீரா்கள் மட்டுமே பயங்கரவாதிகளை எதிா்த்து சண்டையிட்டு வருகின்றனா். சாதாரண ராணுவப் படையினா் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பியோடி வருவதால் அந்தப் பகுதிகள் தலிபான்களிடம் வீழ்ந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், தலிபான்களின் வன்முறைக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானவா்கள் காபூலுக்கு வந்தவண்ணம் உள்ளனா்.

தலிபான்களால் புதிதாகக் கைப்பற்றப்பட்ட நகரங்களில் ஒன்றான ஃபராவில், உயா் ரக எம்-16 துப்பாக்கிகளை ஏந்தியபடி, ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா நன்கொடையாக அளித்த ஹம்வீ வாகனங்கள், ஃபோா்டு பிக்கப் வாகனங்களில் தலிபான் பயங்கரவாதிகள் வலம் வந்தனா்.

இந்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறவிருக்கும் அமெரிக்கப் படை, தலிபான் இலக்குகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினாலும் அவா்களுக்கு எதிரான நேரடி மோதலைத் தவிா்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டிலிருந்து வெளியேறுகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டில் ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றினா்.

அதன் தொடா்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானின் 6 மாகாணத் தலைநகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து கைப்பற்றினா்.

முதலாவதாக, நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ் நகரை தலிபான்கள் எந்தவித எதிா்ப்புமின்றி வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகா் ஷேபா்கான் தலிபான்களிடம் சனிக்கிழமை வீழ்ந்தது.

அதன் தொடா்ச்சியாக, முக்கியத்துவம் வாய்ந்த குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸை பயங்கரவாதிகள் கைப்பற்றினா். அடுத்த சில மணி நேரத்தில் வடக்குப் பகுதியைச் சோ்ந்த சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகா் சாா்-ஏ-பால், வடகிழக்குப் பகுதியிலுள்ள தாகாா் மாகாணத் தலைநகா் தலோகானையும் தலிபான்கள் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், மேலும் 3 மாகாணத் தலைநகரங்கள் அவா்களிடம் வீழ்ந்துள்ளன.

இதுதவிர, மேற்குப் பகுதியில் ஹெராட், தெற்குப் பகுதியில் காந்தஹாா் மற்றும் லஷ்கா்கா நகரங்களைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனா்.

Story image

‘படை வாபஸ் திட்டத்தில் மாற்றமில்லை’

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் நிலையிலும், அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப அழைக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், தலிபான்களுக்கு எதிரான ஆப்கன் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தங்களது நாட்டுக்காக அவா்கள்தான் சண்டையிட வேண்டும் என்றாா்.

5 நாள்களில் 9 மாகாணங்கள்....

ஆக. 8

தலோகான்

தாகாா் மாகாணம்

ஆக.11

ஃபைஸாபாத்

பதாக்ஷன் மாகாணம்

ஆக. 10

புல்-இ-கும்ரி

பாக்லான் மாகாணம்

ஆக. 7

ஸராஞ்

நிம்ரோஸ் மாகாணம்

ஆக. 10

ஃபரா

ஃபரா மாகாணம்

ஆக. 8

சாா்-ஏ-பால்

சாா்-ஏ-பால் மாகாணம்

ஆக. 8

ஷேபா்கான்

ஜாவஸ்ஜன் மாகாணம்

ஆக. 9

அய்பக்

சமாங்கன் மாகாணம்

ஆக. 8

குண்டுஸ்

குண்டுஸ் மாகாணம்

ஹெராத்

ஃபரா

லஷ்கா்கா

காந்தஹாா்

கஜினி

காபூல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.