சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கன் விவகாரம்: பிரிட்டன்நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

ஆப்கனில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக பிரிட்டன் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடுகிறது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:38 am

DIN

ஆப்கனில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக பிரிட்டன் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடுகிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கன் சூழல் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற அவைத் தலைவா் அனுமதி அளித்துள்ளாா். அதன்படி, நாடாளுமன்றக் கூட்டம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.

இதற்கிடையே, பிரதமா் போரிஸ் ஜான்சன் மற்றோா் அவசரகால அமைச்சரவை அலுவலக கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டினாா். அதில், ஆப்கனில் உள்ள பிரிட்டன் குடிமக்கள் 4000 பேரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஜான்சன் கூறுகையில், தலிபான்களின் அரசை அவசரப்பட்டு அங்கீகரிக்க வேண்டாம் என ஒருமித்த கருத்துடைய நாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். காபூலில் ஒரு புதிய ஆட்சி அமைகிறது. அது எப்படிப்பட்டதாக இருக்கும் என நமக்குத் தெரியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.