கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

'அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் நிலைமை சீராக உள்ளது' - ரஷியா

அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலைமை சிறப்பாக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. 

News image

ஆப்கனிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ்

Updated On :17 ஆகஸ்ட் 2021, 6:31 am

DIN

அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலைமை சிறப்பாக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. 

ஆப்கனிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் திங்களன்று எக்கோ மாஸ்க்வி வானொலியில் நேரடி ஒளிபரப்பில் பேசினார். அப்போது, 'ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிலைமை சிறப்பாக இருந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தலிபான்களின் கீழ் உள்ள முதல்நாளிலேயே என்னாலும் இதனைக் கூற முடியும். அஷ்ரப் கனியின் கீழ் இருந்ததை விட தலிபான் பயங்கரவாதிகளின் கீழ் காபூல் நிலைமை சிறப்பாக உள்ளது. காபூலில் நிலைமை அமைதியானது. 

தலிபான் பிரிவுகள் தலைநகருக்குள் நுழைந்து, ஆப்கன் அரசையும் அமெரிக்கப் படைகளையும் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டன. இதனால் அஷ்ரப் கனி தப்பித்துச் சென்றுவிட்டார். இது இழிவான செயல்.

100க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஷி ய தூதரகம் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய அதிகாரிகளை மீட்பது குறித்து செவ்வாய்க்கிழமை தலிபான்களுடன் விரிவான பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தியவிருக்கிறேன். 

முந்தைய ஒப்பந்தங்களின்படி, ரஷிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.