பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,064 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,064 பேர் பலியாகினர்.


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,064 பேர் பலியாகினர்.
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,064 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,71,662 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 41,714 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,04,57,897 ஆக அதிகரித்துள்ளது. 1.93 கோடி பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பிரேசிலில் புதிதாக 37,613 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதும் 1,106 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆஸ்திரேலியாவில் கைமீறி சென்ற கரோனா நிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...