கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலிபான்களுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை: ஜப்பான்

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா

Updated On :20 ஆகஸ்ட் 2021, 12:40 pm

DIN

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஆட்சியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

தலிபான்களுக்கு சீனா ஆதரவளித்துள்ள நிலையில் மற்ற நாடுகள் ஆப்கன் நிலவரம் குறித்து கண்காணித்து வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அங்கீகரிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், நாட்டின் நலன் மற்றும் அமெரிக்கா உள்பட சம்மந்தப்பட்ட பிற நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜப்பான் தேவையான முடிவை எடுக்கும் என்று கூறினார். 

மேலும், 'இப்போதைய நிலைமை நிச்சயமற்றது. அதனால் இப்போது அறிவிப்பு வெளியிடுவது சரியானதாக இருக்காது. நிலைமையை முழுவதும் கண்காணித்த பிறகு ஆலோசனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.