வீடு வீடாக தேடி வேட்டையாடும் தலிபான்கள்
அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்களை அடையாளம் காணும் வகையில் தலிபான்கள் வீடாக வீடாக சென்று தேடி அலைந்துவருகின்றனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்களை அடையாளம் காணும் வகையில் தலிபான்கள் வீடாக வீடாக சென்று தேடி அலைந்துவருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, தலிபான்கள், அமெரிக்காவுக்கிடையே நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர்.
கடந்த ஆட்சியை போல் அல்லாமல் பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும் என தலிபான்கள் உறுதி தெரிவித்துள்ளனர். அதேபோல், எதிரிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் கூறினர்.
ஆனால், உறுதி அளித்ததற்கு நேர்மாறாக தலிபான்கள் நடந்துகொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக, போரின்போது அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகளுக்கு உதவியவர்களை தலிபான்கள் வீடாக வீடாக தேடி அலைகின்றனர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஐநா ஒர் புலனாய்வு ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளது. ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை குறித்து ஏஎஃப்பி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "காபூல் விமான நிலையம் செல்லும் மக்களிடம் தலிபான்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
தங்களின் பேச்சை கேட்டு நடக்காதவர்கள் மீது தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்கிவருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...