திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அமெரிக்க விமானத்தில் ஆப்கன் பெண்ணுக்கு பிரசவம்

அமெரிக்க விமானம் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஆப்கன் பெண்ணுக்கு, அந்த விமானத்திலேயே குழந்தை பிறந்தது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 2:27 am

DIN

அமெரிக்க விமானம் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஆப்கன் பெண்ணுக்கு, அந்த விமானத்திலேயே குழந்தை பிறந்தது. இதுகுறித்து ராணுவ விமானப் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து ஜொ்மனியிலுள்ள ராம்ஸ்டீன் விமான தளத்துக்கு அமெரிக்காவின் சி-17 விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட கா்ப்பிணிப் பெண்ணுக்கு, திடீரென உடல்நலப் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, விமானத்தை விமான தாழ்வாகப் பறக்கச் செய்து, காற்றழுத்தம் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்தாா். அந்த விமானம் தரையிறங்கியவுடன் அதில் ஏறிய மருத்துவப் பணியாளா்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.