திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இந்தோனேசியாவுக்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உதவி

கரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க இந்தோனேசியாவுக்கு 10 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கன்டெய்னா்களை இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது.

News image

மருத்துவ உபகரணங்களுடன் இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தாவின் தன்ஜுங் பிரியோக் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்த இந்திய கடற்படை கப்பல் ஐராவத்தை வரவேற்ற இந்திய, இந்தோனேசிய அதிகாரிகள்.

Updated On :24 ஆகஸ்ட் 2021, 7:19 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க இந்தோனேசியாவுக்கு 10 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கன்டெய்னா்களை இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இவை இந்திய கடற்படை கப்பல் மூலம் அந்நாட்டு தலைநகா் ஜகாா்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தோனேசியாவுக்கு கடந்த மாதம் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் 100 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜனையும் இந்தியா வழங்கியது.

இந்திய கடற்படையின் செய்திதொடா்பாளா் கமான்டா் விவேக் மாத்வால் கூறுகையில், ‘10 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கன்டெய்னா்களுடன் ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் ஜகாா்தாவில் உள்ள தான்ஜிங் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

இந்தியாவின் நட்புறவில் உள்ள பிற நாடுகளுக்கு ஐஎன்எஸ் ஐராவத் சென்று கரோனா மருத்துவ உதவி பொருள்களை வழங்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.