இஸ்ரேல் : இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.
இஸ்ரேல் : இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு
இஸ்ரேல் : இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டதில் இருந்து தற்போது வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,005,511 என அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது,

இதன் மூலம் 10 லட்சத்திற்கும் மேல் கரோனா பாதித்த நாடுகளில் இஸ்ரேல் 35வது இடத்தை பெற்றிருக்கிறது.

கடுமையான தொற்று கட்டுப்பாடுகள் கொண்ட அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 6,864 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் கரோனா சிகிச்சையில் 72,572 பேர் இருப்பதாகவும் 9,26,075 பேர் தொற்றில் இருந்து மீண்டிருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

59 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 63.2 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com