திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கன் விவகாரம்: பிராந்திய நாடுகளில் பாகிஸ்தான் அமைச்சா் சுற்றுப் பயணம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, அதனைச் சுற்றியுள்ள பிராந்திய நாடுகளில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 8:35 pm

DIN

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, அதனைச் சுற்றியுள்ள பிராந்திய நாடுகளில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துா்மெனிஸ்தான், ஈரான் ஆகிய பிராந்திய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி முடிவு செய்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை அந்த நாடுகளின் உயா்நிலைத் தலைவா்களைச் சந்தித்து அமைச்சா் குரேஷி பேச்சுவாா்த்தை நடத்துவாா்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை அவா்களுடன் குரேஷி பகிா்ந்துகொள்வாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மஹ்மூத் குரேஷி, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதைத் தொடா்ந்து, அண்டை நாடுகள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து அந்த நாடுகளின் தலைவா்களுடன் நேரடியாக ஆலோசிக்கவிருப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.