கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே 50% வர்த்தகம் அதிகரிப்பு
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றி அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆப்கன் விவகாரம் குறித்தும் பல்வேறு நாடுகள் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்படும் பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் ஆப்கனில் இருந்து அதிக வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஆப்கனுடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் நட்ஸ் உள்ளிட்ட உலர் பழங்களின் விலை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் எல்லைகள், துறைமுகங்கள் தற்போது தலிபான்களின் வசம் உள்ளதால், போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்தபோதும் ஆப்கனில் இருந்து ஏற்றுமதியும் பாகிஸ்தானில் இறக்குமதியும் அதிகரித்துள்ளன.
தலிபான்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதுபோல, ஆப்கனுக்கு எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் பொருளாதார சூழ்நிலையில் கவனம் செலுத்துவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கனுக்கு நிதியுதவி: சீனா சூசகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...