ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரே நாளில் 26,100 பேர் மீட்பு - அமெரிக்கா தகவல்

சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஒவ்வொரு நாடும் தங்களுடைய குடிமக்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவும்  அங்குள்ள தங்கள் நாட்டு குடிம

News image
ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரே நாளில் 26,100 பேர் மீட்பு - அமெரிக்கா தகவல்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 10:34 am

DIN

சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஒவ்வொரு நாடும் தங்களுடைய குடிமக்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவும்  அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகிறது.

இந்நிலையில் தலிபான்கள்  'மக்களை வெளியேற்றும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு பின் கெடு நீட்டிப்பு கிடையாது. உள்ளே வருகிற விமானங்கள் சிறைபிடிக்கப்படும்' என கூறியிருந்ததால் மக்களை மீட்கும் பணியை அமெரிக்கா தீவிரபடுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் ஆக- 23ம் தேதி காலை தொடங்கி நேற்று 24ம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21,600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது.

37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரையும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரையும் மீட்டு இருக்கிறார்கள். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ' கெடு முடிவதற்குள் அனைத்து குடிமக்களும் பத்திரமாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்படுவார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.