/

இத்தாலி : ரூ.87 -க்கு விற்கப்படும் வீடுகள்

சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில் இத்தாலி நாட்டில் சலேமியில் ஒரு யூரோவிற்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

News image

இத்தாலி கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 8:58 am

DIN

சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில் இத்தாலி நாட்டில் சலேமியில் ஒரு யூரோவிற்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் தான் இந்த  குறைந்த விலை வீடுகள் அரசால் ஏலம் விடப்படுகின்றன. 1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின் மக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கினர்.

இதனால் சலேமி நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்திருந்தது. இதையடுத்து முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த விலையில் அங்கு வீடுகள் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து அந்நகரின் மேயர் ' 400க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்குத் தயாராக இருந்தாலும்  வீடுகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்பதால் விரைவில் இது சுற்றுலா நகராக மாற்றப்படும் ' என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.