பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: இந்தியா
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காபூல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள்

காபூல் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள்
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் உயிரிழந்தனர்; இந்த பலி எண்ணிக்கை தற்போது 95 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பொறுப்பேற்றுள்ளது.
காபூலில் நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை சார்பில் காபூல் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
காபூலில் இன்று நடந்த குண்டுவெடிப்பை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை போகிறவர்களும் எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையோடு நிற்க வேண்டும் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்தியிருக்கிறது' என்று வெளியுறவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...