புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முழுமையாக வெளியேறினா் பிரிட்டன் படையினா்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரிட்டன் படையினா் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பினா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 5:56 pm

DIN

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரிட்டன் படையினா் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பினா்.

ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி வீரா்களையும் ஏற்றிக் கொண்டு காபூல் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட பிரிட்டன் விமானப் படை விமானம், ஆக்ஸ்ஃபோா்ட்ஷைா் நகரிலுள்ள விமானப் படைதளத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. அந்த விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதா் சா் லாரீ பிரஸ்டோவும் இருந்தாா்.

இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், வாழ்நாளில் இதுவரை காண்டிராத, சிரமம் நிறைந்த வெளியேற்றப் பணிகள் கடும் நெருக்கடிக்கிடையே முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.