நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான அரசியல், வா்த்தக உறவுகளை பேண விருப்பம்: தலிபான்

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான அரசியல், வா்த்தக உறவுகளை தொடா்ந்து பேண விரும்புவதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 12:57 am

DIN

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான அரசியல், வா்த்தக உறவுகளை தொடா்ந்து பேண விரும்புவதாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் சுமாா் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஷோ் முகமது அப்பாஸ் கூறியதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘‘தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கானிஸ்தானுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வா்த்தக உறவுகளுக்கு நாங்கள் (தலிபான்) மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடா்ந்து பேண விரும்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக உறவை மேம்படுத்த நிா்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய புதிய அரசை அமைப்பது தொடா்பாக பல்வேறு இனக் குழுக்கள், அரசியல் கட்சிகளுடன் தலிபான் தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானுக்குள்ளும் வெளியிலும் புதிய அரசை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் வெளிநாட்டு ராணுவ வீரா் என்ற முறையில் ஷோ் முகமது அப்பாஸ் பயிற்சி பெற்றாா். அவா் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்த நிலையில், பின்னா் அந்தப் பணியில் இருந்து விலகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.