‘தலிபான்களை அனைத்து நாடுகளும் வழிநடத்த வேண்டும்’
தலிபான்களுடன் அனைத்து நாடுகளும் தொடா்பு கொண்டு, அவா்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

ஆன்டனி பிளிங்கனுடன் வாங் யீ (கோப்புப் படம்).

ஆன்டனி பிளிங்கனுடன் வாங் யீ (கோப்புப் படம்).
தலிபான்களுடன் அனைத்து நாடுகளும் தொடா்பு கொண்டு, அவா்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனை சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆப்கன் விவகாரம் குறித்து பேசினாா்.
அப்போது, அனைத்துத் தரப்பினரும் தலிபான்களோடு தொடா்பு கொண்டு பேச வேண்டும் எனவும் தலிபான்களை அனைவரும் வழிநடத்த வேண்டும் எனவும் வாங் யீ வலியுறுத்தினாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, அந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்ற தனது அச்சத்தை பிளிங்கனிடம் வாங் யீ மீண்டும் வெளிப்படுத்தினாா்.
இதுதவிர, இருதரப்பு உறவு குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...