வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இந்தோனேசியா: சுனாமி எச்சரிக்கைக்குப் பின் கடலில் நீர்மட்டம் உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :14 டிசம்பர் 2021, 10:39 am

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததது.

ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் , நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுலவேஸி மாகாணத்தில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின் இந்தோனேசியாவில் 20-க்கும் மேற்பட்ட லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நகீயோ மற்றும் மங்க்கரை மாவட்டங்களில் உள்ள கடலின் நீர் 7 சென்டிமீட்டர் வரை உயர்ந்திருக்கிறது என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் , பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளை வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்தரா பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் தமிழக கடலோரப் பகுதிகள் சுனாமியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.