நார்வே நிலச்சரிவு: 2 வாரங்களுக்குப் பிறகு இருவரது உடல்கள் மீட்பு
நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 2 வார காலத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.


நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 2 வார காலத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.
தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் வரை பலியாகியும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் 2 வார காலத்திற்கு பிறகு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரது உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...