இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் பங்கேற்றுள்ளதாகத் தேசிய பேரிடர் தொடர்பாளர் ராதித்யா ஜதி தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அவர் கூறியது,
ஞாயிற்றுக்கிழமை சுற்றியுள்ள மலைகளிலிருந்து மண் உருண்டதில் குறைந்தது எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. 21 பேர் மண்ணில் புதைந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
மண்ணில் புதைந்த இரண்டு பேரின் உடல்கள் சடலங்களாக மீட்டுள்ளனர் மற்றும் காயமடைந்த மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும் காணாமல் போன 16 கிராம மக்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் கனரக உபகரணங்கள் இல்லாததால் தேடுதல் பணி முடங்கியுள்ளது.
ஒரேநாளில் பெய்த மழையால் மாகாணத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகள் கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.
இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழையால் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


